கடலுார் முதுநகரில் 12 பைக் பறிமுதல்
கடலுார் : கடலுார் வண்டிப்பாளையத்தில் சந்தேகத்திற்கிடமான 12 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலுார், வண்டிப்பாளையம் சூர்யா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூதாட்டம் நடப்பதாக முதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, சூதாடிக கொண்டிருந்தவர்கள் தப்பியோடினர். அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்த பைக்குகள் சூதாடிய நபர்களுடையதா அல்லது திருட்டு பைக்குகளா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.