உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேத்தியாத்தோப்பு அணையில் 13,000 கன அடி நீர் வெளியேற்றம்

சேத்தியாத்தோப்பு அணையில் 13,000 கன அடி நீர் வெளியேற்றம்

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அணையில் தண்ணீர் வரத்து குறைந்து 13 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 48 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் விருத்தாசலம் - புவனகிரி சாலையில் மிராளூர் அருகே வெள்ளாற்று தண்ணீர் சாலையில் வழிந்து சென்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து 43 ஆயிரம் கன தண்ணீர் வெளியேற்றினர். மணிமுத்தாறு, பெலாந்துறை அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக நேற்று குறைந்தது. இதனால், நேற்று சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றப்பட்டது. அணைக்கட்டிற்கு வரும் தண்ணீரை சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப்பிரிவு உதவி பொறியாளர், பணியாளர்கள் மூர்த்தி, ரமேஷ், செந்தில், லட்சுமணன் ஆகியோர் தீவிர கண்காணித்தனர்.அதேபோல், சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு குமார உடைப்பு வாய்க்கால், 25 கண்மதகு ஆகியவற்றில் இருந்து வரும் உபரி நீர் படிப்படியாக குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி