உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டத்தில் 178 போலீசார் இடமாறுதல்

கடலுார் மாவட்டத்தில் 178 போலீசார் இடமாறுதல்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 178 போலீசாருக்கு விருப்ப இட மாறுதல் அளித்து எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார். மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 7 உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சிறப்பு பிரிவுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிந்து வரும் போலீசார், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் இடமாறுதல் கோரி எஸ்.பி., ஜெயக்குமாரிடம் விருப்ப மனு அளித்தனர். அதன்படி, விருப்ப மனு அளித்த போலீசாருக்கு இடமாறுதல் கலந்தாய்வு கடலுார் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, விருப்ப மனு அளித்த 178 போலீசார் மற்றும் சிறப்பு எஸ்.எஸ்.ஐ.,க்களுக்கு இட மாறுதல் அளித்து உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், உட்கோட்ட டி.எஸ்.பி.,க்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை