மேலும் செய்திகள்
செம்மண் கடத்திய லாரிகள் பறிமுதல்
12-Jun-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே இருதரப்பு மோதலில், 19 பேரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பரிதி, 30; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செழியன் என்பவர் அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்துள்ளார்.இதனை பரிதி தட்டிக் கேட்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், கோ.பொன்னேரியைச் சேர்ந்த நிஷாந்த், சூர்யா, ஆதரவாளர்கள் கார்குடலை சேர்ந்த அரிஹரன், சதீஷ்குமார், அன்புச்செழியன், சந்திரசேகர் ஆகியோர் சேர்ந்து பரிதியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். அதே போல், பரிதி மற்றும் ஆதரவாளர்கள் 12 பேர், நிஷாந்த் உள்ளிட்டோரை சரமாரியாக தாங்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இருதரப்பு புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, நிஷாந்த், சூர்யா, அரிஹரன் உள்ளிட்ட 19 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
12-Jun-2025