உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது

நடுவீரப்பட்டு: சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று முன்தினம் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. தஞ்சாவூர், திருவையாறைச் சேர்ந்த ஜெயபால் கண்டக்டர் பணியில் இருந்தார். விழுப்புரம் அடுத்த கோலியனுார் அருகே பஸ் வந்த போது, பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரகாஷ் மனைவி புனிதவதி பஸ்சில் ஏறினார்.டிக்கெட் எடுக்க சில்லரையாக கொடுக்காததால் கண்டக்டர் ஜெயபாலுக்கும், புனிதவதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கணவர் பிரகாஷிடம்,30; மொபைல் போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் பஸ்சில் இருந்து புனிதவதி கீழே இறங்கினார். அங்கு காத்திருந்த பிரகாஷ், அவரது நண்பர் பண்ருட்டி ஹவுசிங் போர்டு விக்னேஷ்,25; ஆகியோர் கண்டக்டர் ஜெயபாலை திட்டி தாக்கினர். புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து பிரகாஷ், விக்னேைஷ கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ