சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
நெல்லிக்குப்பம்: பண்ருட்டி அருகே சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்து ஊறலை அழித்தனர்.பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் முடப்புளி கிராமத்தில் முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சுவதாக கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கலால் டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சிய இருவர் போலீசை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடினர். போலீசார் துரத்திச் சென்று அவர்களை பிடித்து விசாரித்தனர்.அதில், முடப்பள்ளி சுப்மணியன், 70; காட்டுக்கூடலுார் சேட்டு, 55; என தெரியவந்தது. உடன் இருவரையும் போலீசார் கைது செய்து அங்கிருந்த சாராய ஊறலை அழித்தனர். மேலும், 10 லிட்டர் சாராயம், 8 புதுச்சேரி மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.