உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 60 கிலோ குட்கா கடத்தல் கடலுாரில் 2 பேர் கைது

60 கிலோ குட்கா கடத்தல் கடலுாரில் 2 பேர் கைது

கடலுார்: கடலுாரில் ரூ. 33 ஆயிரம் மதிப்புள்ள 60 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் புதுநகர் போலீசார், சாவடி செக்போஸ்டில் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அப்போது, கடலுார் எஸ்.என்.சாவடியை சேர்ந்த விஜய்,32, என்பவர் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 25கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தி சென்றது தெரியவந்து கைது செய்தனர். அதேபோல் புதுச்சேரி குருவிநத்தத்தை சேர்ந்த சரவணன்,38, என்பவர் காரில் கடத்திவந்த ரூ. 21 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.இதுகுறித்து கடலுார் நகர போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை