உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சிதம்பரம் : குமராட்சி பகுதியில் கடை களில் பணிபுரிந்த இரண்டு குழந்தை தொழிலாளர்களை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.குமராட்சி பகுதியில் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக சைல்டு லைன் அமைப்பிற்கு புகார் சென்றது. இதையடுத்து கடலுார் தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) ஞானபிரகாசம் தலைமையிலான குழுவினர் குமராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் 18வயது நிறைவடையாத இரண்டு சிறுவர்கள் கடையில் பணிபுரிவதை கண்டறிந்து மீட்டு, அவர்களை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். கடை உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை