மேலும் செய்திகள்
தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் சுதந்திர தின விழா
18-Aug-2025
சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2 நாள் தேசிய மாநாடு நடந்தது. வணிக நிர்வாகத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் 'இயற்கை சாதனங்களுக்கான நிலைத்த ஆதாயங்கள் மற்றும் சப்ளை செயின் மேலாண்மை சவால்கள் மற்றும் புதுமைகள்' தலைப்பில் 2 நாள் தேசிய மாநாடு 28, 29 தேதிகளில் நடந்தது. மாநாட்டிற்கு வணிக நிர்வாக துறை தலைவர் வானதி வேம்பார் வரவேற்றார். மாநாட்டு இயக்குநர், கலைப்புல முதல்வர் அருள் தொடக்க உரையாற்றினார். பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரி வாழ்த்தி பேசினார். மாநாட்டில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் 250க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மாநாட்டு துணை இயக்குனர் திலீபன் ஒருங்கிணைத்தார். நாராயணன் நன்றி கூறினார்.
18-Aug-2025