மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற இருவர் கைது
29-Nov-2024
மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் நேற்று மங்கலம்பேட்டை, கோ,பூவனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, செம்பருத்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த கண்ணன், 45; என்பவரது வீட்டில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதேபோல், கோ.பூவனுார் கிராமத்தைச் சேர்ந்த அருண்பிரசாத், 44; என்பவரது பெட்டிக்கடைகளில், 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து மங்கமலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்தகண்ணன், அவரது தந்தை ராதாகிருஷ்ணன் மற்றும் அருண்பிரசாத் ஆகிய 3 பேரையும் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
29-Nov-2024