மேலும் செய்திகள்
மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது
16-Aug-2025
விருத்தாசலம்: விடுமுறை நாளில் மதுவிற்பனை செய்த மூதாட்டி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி இன்ஸ்பெக்டர் குமாரி, சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ஏ.வல்லியம் கிராமத்தில் கருவேல தோப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரித்தனர். அவர், சி.கீரனுார் கண்ணன், 56; என்பதும், 40 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதும் தெரிந்தது. இதேபோல், சின்னசாமி மனைவி ஜெயா, 62,; என்பவரிடம் இருந்து 4 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, கண்ணன், ஜெயாவை கைது செய்தனர். மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் எம்.பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 49; என்பவரை கைது செய்து, 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
16-Aug-2025