300 கிலோ இரும்பு திருடிய 3 பேர் கைது
கடலுார் : ரெட்டிச்சாவடி அருகே தனியார் நிறுவனத்திலிருந்து 300 கிலோ பழைய இரும்பு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடையைச் சேர்ந்தவர் மதன்ராஜ்,31. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ளார். அந்த நிறுவனத்தில் இருந்த 300 கிலோ பழைய இரும்பை கடந்த 24ம் தேதியில் இருந்து 27ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், சிங்கிரிகுடியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்,24; புதுக்கடை மேட்டுப்பாளையம் மணிகண்டன்,27; ராஜேந்திரன்,59, ஆகியோர் இரும்பு திருடிச் சென்றது தெரிந்தது.நேற்று புதுக்கடை ஏரிக்கரையில் புதைத்து வைத்திருந்த இரும்பை எடுக்க வந்த போது 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.