உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் 3 பேர் கைது

கொலை மிரட்டல் 3 பேர் கைது

விருத்தாசலம்: பட்டாசு வெடித்த தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கம்மாபுரம் அடுத்த சாத்தப்பாடி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்புமணி, 40; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அழகேசன், 30; இருவருக்கும் இடையே பட்டாசு வெடித்ததில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகேசன் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து அன்புமணியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், அழகேசன், நீலகண்டன், 38; சுரேஷ், 29; ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !