மேலும் செய்திகள்
'யு டியூப்' பார்த்து செயின் பறித்த இருவர் கைது
17-Apr-2025
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் சபாநாயகர் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் அவினேஷ் தீட்சிதர், 18; கடந்த 15 ம் தேதி இரவு கீழ வீதியில் பைக்கில் சென்று கொண்டிருந்போது, திடீரென இரு பைக்குகளில் வந்த நான்கு வாலிபர்கள் அவினேஷை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்துச்சென்றனர். அவினேஷ் புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.அதில், வழிப்பறியில் ஈடுபட்ட, சிறுவர்கள் பழைய புவனகிரி ரோடு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனையடுத்து, சிறுவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.மேலும் ஒரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
17-Apr-2025