மேலும் செய்திகள்
கூழாங்கற்கள் கடத்தல் லாரி பறிமுதல்: டிரைவர் கைது
19-Apr-2025
விருத்தாசலம்: டிப்பர் லாரியில் கூழாங்கற்கள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், குப்பநத்தம் புறவழிச்சாலையில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 3 டிப்பர் லாரிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.இதில், தலா 3 யூனிட் வீதம் 9 யூனிட் கூழாங்கற்களை காட்டுக்கூடலுார் பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது. இது குறித்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து லாரி டிரைவர்கள் நடியப்பட்டு மணிகண்டன், 32; கலர்குப்பம் ஞானசேகர் மகன் வீரசேகர்,22; பாலக்கொல்லை சந்தோஷ்,35; ஆகியோரை கைது செய்தனர். உடன், போலீசார் டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
19-Apr-2025