உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெண்ணிடம் 3 சவரன் பறிப்பு

 பெண்ணிடம் 3 சவரன் பறிப்பு

வேப்பூர்: பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேப்பூர் அடுத்த காட்டுமயிலுாரை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி கண்ணகி, 40; விவசாயி. இவர், நேற்று தனது கணவருடன் வேப்பூர் கூட்டுரோட்டிலுள்ள வங்கியில் அடகு வைத்த, 3 சவரன் நகையை மீட்டு, அதனை பையில் வைத்து வங்கியை விட்டு வெளியே வந்தார். பகல் 1:30 மணியளவில் விருத்தாசலம் மார்க்க சாலையிலுள்ள பழக்கடை அருகே கணவருடன் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியே பைக்கில் வந்த, 2 மர்ம நபர்கள் கண்ணகி, நகை வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை