பண்ருட்டியில் விஷ வண்டு கடித்து 30 பேர் காயம்
பண்ருட்டி : பண்ருட்டி அருகே அய்யனார் கோவில் மண்டல அபிஷேக பூஜையின் போது கதண்டு வண்டு கடித்து 30 பேர் காயமடைந்தனர்.பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3ம் தேதி நடந்தது. இதனையொட்டி மண்டல அபிஷேக நிறைவு பூஜை நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.அப்போது ஏற்பட்ட புகையால், அருகில் உள்ள ஆலமரத்தில் இருந்த கதண்டு வண்டுகள் பறந்து வந்து, கோவிலில் இருந்த மக்களை கடித்தன. இதில், தாழம்பட்டு செங்கல்வராயன்,60; செம்மேடு ஆறுமுகம், 70; தமிழரசி,60; அற்புதவேல்,51; உட்பட 30 பேர் காயமடைந்தனர். இவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலமாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ஆறுமுகம், செங்கல்வராயன் மேல்சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு தாசில்தார் ஆனந்த், பி.டி.ஓ.,க்கள் புனிதா, பாபு ஆறுதல் கூறினர்.