உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 32,954 பேர்! மாவட்டத்தில் 155 மையங்கள் ஏற்பாடு

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 32,954 பேர்! மாவட்டத்தில் 155 மையங்கள் ஏற்பாடு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இன்று துவங்க உள்ளபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 32,954 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர்.தமிழகம் முழுவதும் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்கி நடந்து வந்தது. பிளஸ் 2 தேர்வு கடந்த வாரம் முடிவடைந்தது. 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (29ம் தேதி) துவங்குகிறது.கடலுார் வருவாய் மாவட்டத்தில் 437 அரசு, மெட்ரிக் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 17 ஆயித்து 384 மாணவர்கள், 15 ஆயிரத்து 570 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 954 பேர் எழுத உள்ளனர். மாணவியர்களை விட மாணவர்கள் 1814 பேர் அதிகம் எழுதுகின்றனர். கடலுார் வருவாய் மாவட்டத்தில் கடந்தாண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி, பொதுத் தேர்வில் 246 அரசுப்பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 148 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட மொத்தம் 440 பள்ளிகளில் இருந்து 16,908 மாணவர்களும், 15,661 மாணவிகள் உட்பட மொத்தம் 32,569 பேர் தேர்வு எழுதினர். இந்தாண்டு 385 மாணவ, மாணவியர்கள் அதிகம் எழுதுகின்றனர். இதற்காக கடலுார், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 156 முதன்மை தேர்வு அலுவலர்கள், 1,720 அறை கண்காணிப்பாளர்கள், 332 நிலையான கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் இருந்து 5 பேர் கொண்ட சிறப்பு பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட உள்ளனர். வினாத்தாள்களை கொண்டு செல்ல 35 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு பள்ளிகளில் பதிவெண் போடும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். வெளிநபர்கள் உள்ளே செல்வதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை