உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காரில் 280 கிலோ குட்கா கடத்தல் மந்தாரக்குப்பத்தில் 4 பேர் கைது

காரில் 280 கிலோ குட்கா கடத்தல் மந்தாரக்குப்பத்தில் 4 பேர் கைது

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அருகே காரில், 280 கிலோ குட்கா கடத்தி வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், மந்தாரக்குப்பம் பகுதிகளில் காரில் குட்கா பொருட்கள் சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி வீரன் கோவில் அருகில் இன்ஸ்பெக்டர் இளவழகி தலைமையில் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஹூண்டாய் வெர்னா காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில், 280 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து வடலுாரை சேர்ந்த இமானுவேல், 51; விற்பனை செய்தது தெரியவந்தது. மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டம் ராம்புர காலணியை சேர்ந்த பிரவீன்குமார், 25; பிரகாஷ் குமார், 25; திலீப்சிங், 22; இமானுவேல், 51; ஆகியோரை கைது செய்து 280 கிலோ குட்கா, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், கடலுார் மாவட்டத்தில் குட்கா போதை பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 269 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 4000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 பேர் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !