ஜீப்-பஸ் மோதிய விபத்தில் 4 பேர் காயம்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே ஜீப் மீது பஸ் மோதிய விபத்தில் மாவட்ட நூலக அலுவலர் காயமடைந்தார். கடலூர் மாவட்ட நூலக அலுவலராக பணியாற்றுபவர் முருகன்; இவர் ஜீப்பில் கடலூரில் இருந்து நேற்று காலை பண்ருட்டிக்கு சென்றார்.ஜீப்பை டிரைவர் சுப்ரமணியன் ஓட்டி சென்றார்.நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டூரிஸ்ட் பஸ் ஜீப் மீது மோதியது.அப்போது பின்னால் வந்த பைக் ஜீப் மீது மோதியது. இந்த விபத்தில் மாவட்ட நூலக அலுவலர் முருகன், டிரைவர் சுப்ரமணியன், பஸ் டிரைவர் வினோத், பைக்கில் வந்த கடலூர் எஸ்.பி.அலுவலக அமைச்சுப் பணியாளர் கணேசன் ஆகியோர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.