உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய 5 பேர் கைது

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய 5 பேர் கைது

நெய்வேலி: என்.எல்.சி., சுரங்கத்தில் 800 கிலோ இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேரை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பிடித்து டவுன்ஷிப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.என்.எல்.சி., முதல் சுரங்க விரிவாக்க பகுதியில் நேற்று முன்தினம், இரவு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுரங்கத்தில் இருந்து 5 பேர், 800 கிலோ எடையுள்ள இரும்பு பிளேட்டுகளை திருடி சென்றனர். அவர்களை, தொழிலக பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்து, நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர்கள் இருப்புகுறிச்சி பரமசிவம் மகன் ராஜீவ்காந்தி, 30, சேப்ளாநத்தம் வேல்முருகன் மகன் விஜய், 28; அய்யாதுரை மகன் பாரதிராஜா, 38; மேல்பாப்பனம்பட்டு கிராமத்தை சேர்ந்த கனகவேல் மகன் ராஜ மாணிக்கம், 33; கெங்கை கொண்டானை சேர்ந்த பக்கிரி மகன் பிரபு, 24; என்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து, திருடிச் சென்ற இரும்பு பிளேட்டுகள் மற்றும் இரும்பு திருட பயன்படுத்திய டெம்போவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ