உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொள்ளையடிக்க சதித் திட்டம் நெய்வேலியில் 5 பேர் கைது

கொள்ளையடிக்க சதித் திட்டம் நெய்வேலியில் 5 பேர் கைது

நெய்வேலி, : நெய்வேலியில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நெய்வேலி நகரம், வட்டம் 5, சுடுகாடு அருகே தைலம் தோப்பு பகுதியில் போலீசாரை பார்த்ததும், ஒரு கும்பல் தப்பியோடியது. சந்தேகமடைந்த போலீசார் விரட்டிச் சென்று 5 பேரை பிடித்தனர். மற்ற 3 பேர் தப்பினர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், நெய்வேலி டவுன்ஷிப் அடுத்த பாரதி நகர் பாலகிருஷ்ணன் மகன் அர்ஜுன்குமார்,22; பாரதி நகர் கணேசன் மகன் தட்சிணாமூர்த்தி,18; மேல் வடக்குத்து காலனி ராமர் மகன் கிருஷ்ணமூர்த்தி,22; வட்டம் 2, மாற்று குடியிருப்பு பழனிவேல் மகன் மணிவண்ணன்,21; கணேசன் மகன் அறிவழகன்,19; என்பது தெரிந்தது. இவர்கள் நெய்வேலி டவுன்ஷிப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்து, பட்டா கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை