உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சட்ட விரோத கருக்கலைப்பு 5 பேரிடம் விசாரணை

சட்ட விரோத கருக்கலைப்பு 5 பேரிடம் விசாரணை

கடலுார் : கடலுாரில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக தம்பதி உட்பட 5 பேரிடம் போலீசாரிடம் விசாரிக்கின்றனர். கடலுார், புதுப்பாளையம் பகுதியில் சிலர் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கடலுாரைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தம்பதி அளித்த தகவலின் பேரில், மேலும் மூவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி