உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ.,வினர் சாலை மறியல் பண்ருட்டியில் 50 பேர் கைது

மா.கம்யூ.,வினர் சாலை மறியல் பண்ருட்டியில் 50 பேர் கைது

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் மற்றும் பண்ருட்டியில் வி.கே.டி சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி மா.கம்யூ., சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பண்ருட்டியில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.வி.கே.டி., சாலை பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் சாலைகள் மோசமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மா.கம்யூ.,வினர் சோழத்தரத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு பிரகாஷ், ஸ்ரீமுஷ்ணம் வட்ட செயலாளர் தினேஷ்பாபு, வட்டக்குழு வெற்றிவீரன், ஆதிமூலம், பாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, டி.எஸ்.பி., விஜிகுமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 11:20 மணிக்கு கலைந்து சென்றனர்.

பண்ருட்டி

பண்ருட்டியில் காலை 11:30 மணியளவில் நடந்த போராட்டத்திற்கு, மா., கம்யூ வட்ட செயலாளர் எழுமலை தலைமை தாங்கினார். நகர செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50 பேரை 11:45 மணிக்கு பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ