கரூர் வைஸ்யா வங்கி கிளையின் 54வது ஆண்டு விழா
கடலுார்: கடலுாரில் இயங்கும் கரூர் வைஸ்யா வங்கி கிளையின் 54வது ஆண்டு துவக்க விழா நடந்தது. விழாவையொட்டி டாக்டர் அகர்வால் மருத்துவமனை மற்றும் பி வெல் மருத்துவமனை குழுமம் ஆகியன சார்பில் வாடிக்கையாளர்களுக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டன. தொடர்ந்து, கரூர் வைஸ்யா வங்கியின் விழுப்புரம் மண்டல மேலாளர் பிரபாகரன் தலைமையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நடந்தது. கிளை மேலாளர் திருநாவுக்கரசன் பேசினார். உதவி மேலாளர் மதுசூதனன் நன்றி கூறினார்.