உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ்சில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

பஸ்சில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

புவனகிரி : புவனகிரி அருகே பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் செயினை அறுத்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். புவனகிரி அடுத்த பின்னலுார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி சிவகாமசுந்தரி, 70; உறவினர் வீடான கீரப்பாளையத்திற்கு வந்திருந்தார். அங்கிருந்து 2 நாட்களுக்கு முன் தனியார் பஸ்சில் பின்னலுாருக்கு சென்றார். மஞ்சக்கொல்லை அருகே சென்றபோது, அவர் அணிந்திருந்த 6 சவரன் செயின் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து மூதாட்டியிடம் செயினை அறுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !