புவனகிரியில் 81 மி.மீ., மழை
கடலுார்: வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் துவங்கி மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 வரையில் புவனகிரியில் அதிகபட்சமாக 81. மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விருத்தாசலம் 60.2, கலெக்டர் அலுவலகம் 58.6, மேமாத்துார் 57.0, வேப்பூர் 55.0, லால்பேட்டை 50.2, காட்டுமயிலுார் 48.0, சேத்தியாத்தோப்பு- 40.49 , கடலுார் - 36.21, அண்ணாமலைநகர் 32.0, சிதம்பரம் 29.51, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 25.01, காட்டுமன்னார்கோவில் 13.3 மீ.மீட்டர் என, மாவட்டம் முழுவதும் மழை பதிவாகியுள்ளது.