மேலும் செய்திகள்
போதையில் மினி பஸ் ஓட்டிய டிரைவர் கைது
26-Sep-2024
அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு
25-Oct-2024
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் அரசு டவுன் பஸ் தானாக ஓடிச்சென்று, எதிரே இருந்த காம்ளக்சில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் முதுநகரில் இருந்து, பரங்கிப்பேட்டைக்கு நேற்று மாலை பயணிகளுடன் அரசு டவுன் பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் சபாபதி என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சை, பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் கோவில் தெரு பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, அரசு மருத்துவமனை முன், டிரைவர் நிறுத்தினார். அருகில் உள்ள கடைக்கு டீ குடிப்பதற்காக, டிரைவர் மற்றும் கண்டக்டர் சென்றனர்.சற்று நேரத்தில் கியரில் நிறுத்திருந்த பஸ், திடீரென தானாக ஓடி எதிரே இருந்த காம்ளக்சில் இருந்த பூக்கடை மீது மோதி நின்றது. பஸ், தானாக வருவதை பார்த்ததும், அப்பகுதியில் நின்றிருந்தவர்கள், அலறியடித்து ஓடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.பஸ்சின் முன் பக்க கண்ணாடியும், பூக்கடை முழுவதும் சேதமடைந்தது.இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் பரங்கிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26-Sep-2024
25-Oct-2024