கலெக்டர் ஆபீசில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த 3 அடி நீள கட்டுவிரியன் பாம்பு பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 6:15 மணியளவில் 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு சுற்றிக்கொண்டிருந்தது.அப்போது, இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற ஊழியர்கள் பாம்பை கண்டு அலறியடித்து சத்தம்போட்டனர். தகவலறிந்த வன உயிரின ஆர்வலர் செல்லா, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கட்டுவிரியன் பாம்பை லாவமாக பிடித்தார். பின், அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டார்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.