உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரேஷன் கடைக்குள் புகுந்த  நல்லப்பாம்பு மீட்பு 

 ரேஷன் கடைக்குள் புகுந்த  நல்லப்பாம்பு மீட்பு 

பெண்ணாடம்: ரேஷன் கடைக்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு விரர்கள் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர். பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரேஷன் கடையில் வழக்கம்போல், விற்பனையாளர் பணியில் இருந்தார். அப்போது, மாலை 4:00 மணியளவில் சாக்குகள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு படம் எடுத்து ஆடியதைக்கண்டு ரேஷன் கடை ஊழியர்கள் அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டனர். பின்னர், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள், பாம்பை உயிருடன் பிடித்து, காப்புக்காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !