உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தப்பியோட முயன்ற ரவுடிக்கு மாவுக்கட்டு

தப்பியோட முயன்ற ரவுடிக்கு மாவுக்கட்டு

நெய்வேலி; கொலை மிரட்டல் வழக்கில் தப்பியோட முயன்ற ரவுடி கீழே விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நெய்வேலியில் நடந்து சென்ற இளைஞரை கத்தியால் தாக்கிய ரவுடியை டவுன்ஷிப் போலீசார் கைது செய்ய முற்பட்டபோது தப்பியோடியதால் வழுக்கி விழுந்த ரவுடிக்கு மாவுகட்டு போட்ட போலீசார் அவருக்கு சிகிச்சை அளித்து கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த சொரத்துாரை சேர்ந்த ராமர் மகன் கோபிநாத். 25; இவர், கடந்த 24ம் தேதி, அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். செடுத்தான்குப்பம் முருகவேல் மகன் ராக் ( எ) ராஜ்குமார்,27; கோபிநாத்தை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார், டவுன்ஷிப் வட்டம் 5ல் உள்ள மயானம் அருகே பதுங்கியிருந்த ராஜ்குமாரை நேற்று சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது தப்பியோட முயன்ற ராஜ்குமார் கீழே விழுந்ததில் இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து சிறையில் அடைக்கபட்டார். ராஜ்குமார் மீது ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருத்தல், வழிப்பறி என 10 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை