நடுவில் கொஞ்சம் கற்றலை தேடி சிறப்பு திட்ட முகாம் துவக்கம்
பெண்ணாடம் : பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'நடுவில் கொஞ்சம் கற்றலை தேடி' சிறப்பு செயல் திட்ட முகாம் துவங்கப்பட்டது. பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 6 முதல் 8ம் வகுப்பு வரை எழுத படிக்க தெரியாத மற்றும் பள்ளிக்கு சரியாக வராத 30 மாணவர்களை கண்டறிந்து 'நடுவில் கொஞ்சம் கற்றலை தேடி' என்ற சிறப்பு செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களை தேர்வு செய்து 3 ஆசிரியர்கள் மூலம் 90 நாட்களில் கல்வித்திறனை மேம்படுத்தி, முழு தேர்ச்சி அடைய சிறப்பு செயல் திட்ட முகாம், பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி, மாணவர்கள் கல்வி கற்பதன் பயன்கள், நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகுணா, துணை தலைவர் வகிதா, நல்லுார் வட்டார வள மைய பயிற்றுனர் ஜெயஸ்ரீ, ஆசிரியர், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.