மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
25-Oct-2024
கடலுார் : கடலுார், முதுநகர் அடுத்த சின்னகாரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 35; இவர், சிவானந்தபுரத்தை சேர்ந்த தினேஷ் பெஞ்சமின் மகன் ஜெய்வின் ஜோசப், 18; என்பவரை கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சில் கொலை செய்த வழக்கில் முதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ஜாமினில் வெளியே வந்த அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவரை பிடிக்க எஸ்.பி., ராஜாராம் உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர்.இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த இளங்கோவனை தனிப்படை போலீசார் நேற்று பிடித்து முதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
25-Oct-2024