உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலத்தில் மணல் குவியலால் விபத்து

பாலத்தில் மணல் குவியலால் விபத்து

புவனகிரி : புவனகிரி வெள்ளாற்றுப் பாலத்தில் மணல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. சிதம்பரத்தில் இருந்து கீரப்பாளையம், புவனகிரி வழியாக கடலுார், புதுச்சேரி மற்றும் விருத்தாசலம், சேலம், பண்ருட்டி, விழுப்புரம் மார்க்கத்திற்கு தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கிறது. இதுதவிர உள்ளூர் வாகனங்கள் அதிகளவில் வெள்ளாற்றுப்பாலத்தை கடந்து செல்கிறது. இதனால் மணல் குவிந்து கிடக்கிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்காததால் மணல் குவிந்து வருவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. காற்று வீசும் போது, மணல் கண்ணீல் விழுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மணலை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை