ரத்தனா பள்ளியில் சாதனையாளர்கள் விழா
பண்ருட்டி; பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாதனையாளர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஸ்ரீதர் பேசினார். பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி இயக்குனர்கள் பாலகிருஷ்ணன் ,தேவநாதன் விழாவில் கலந்து கொண்டனர்.விழாவில் 2024--25 ம் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் ரவி கேடயம் வழங்கி பாராட்டினார்.சிறந்த நட்சத்திர மாணவர் விருது 4 ம் வகுப்பு மாணவி ஹேமாவிற்கும். 6 ம் வகுப்புமாணவர் ஹவனீஸ்வரனுக்கும் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, மல்லர்கம்ப சாகச நிகழ்ச்சி நடந்தது.