மேலும் செய்திகள்
மாணவிகளுக்கு பாராட்டு
12-Dec-2024
கடலுார்: மாவட்ட அளவிலான போட்டிகளில், வெற்றி பெற்று சாதனைபடைத்த கடலுார் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரை பள்ளி தலைவர் பாராட்டினார். கடலுார் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பாரதியார் மற்றும் குடியரசு தினவிழா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடலுார் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி 17 வயதுகுட்பட்ட பிரிவு ஜூடோ போட்டியில் முதலிடம் பிடித்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் தங்கபதக்கம் பெற்றார். இவர், மாநில அளவிலான ஜூடோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதேபோல், பிளஸ் 1 மாணவர் ஷிவநாத்வர்மா, 17 வயதுக்குட்பட்ட பிரிவில் டேக்வாண்டோ போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித்தலைவர் சிவக்குமார், பதக்கம் அணிவித்து பாராட்டினார்.அப்போது, பள்ளி முதல்வர் உதயகுமார் சாம், ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
12-Dec-2024