உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.ஐ., மீது நடவடிக்கை: எஸ்.பி.,யிடம் பா.ம.க., மனு

எஸ்.ஐ., மீது நடவடிக்கை: எஸ்.பி.,யிடம் பா.ம.க., மனு

கடலுார் : நடுவீரப்பட்டு அருகே பள்ளி மாணவனை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் பா.ம.க., வினர் மற்றும் பொதுமக்கள் கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த குழந்தைகுப்பத்தில் கடை தெருவுக்கு சென்ற பிளஸ் 1 மாணவரை, அவ்வழியே சென்றசப் இன்ஸ்பெக்டர் லத்தியால் தாக்கினார். மேலும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றும் தாக்கியதாக கூறப்படுகிறது. வெளியேசொன்னால் கஞ்சா வழக்கு போட்டுவிடுவேன் என மிரட்டி அனுப்பி உள்ளார். இதில் காயமடைந்த மாணவன், கடலுார் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தவறு செய்யாத மாணவனை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பா.ம.க., முன்னாள் மாணவரணி செயலாளர் விஜயவர்மன், நகர தலைவர்ரமேஷ்,ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜா, ஒன்றிய தலைவர் நாகராஜ் மற்றும் குழந்தைகுப்பம் கிராம மக்கள், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை