உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூடுதல் ஆதார் சேவை மையம் தபால் நிலையத்தில் திறப்பு

கூடுதல் ஆதார் சேவை மையம் தபால் நிலையத்தில் திறப்பு

கடலுார், ; கடலுார் தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையத்தில் கூடுதல் கவுன்ட்டர்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் சேவை மையம் கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக மேலும் இரண்டு சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி, ஆதார் சேவை மைய கூடுதல் சிறப்பு கவுன்ட்டர்களை திறந்து வைத்தார். அஞ்சல் அலுவலக சேவை மையத்தில் புதிய ஆதார் அட்டை, பெயர், முக வரி, மொபைல் எண் போன்றவை திருத்தம் செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் கடலுார் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் கலைவாணி, உதவி கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி, அஞ்சல் ஆய்வாளர்கள், அலுவலர்கள், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி