மேலும் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு
05-Aug-2025
புவனகிரி : மேல்புவனகிரி அடுத்த லால்புரம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கூடுதல் கலெக்டர் பிரியங்கா ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, துாய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணியை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணிகள், கலைஞர் கனவு இல்லம் கட்டும் பணிகள் மற்றும் ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். ஊராட்சி செயலாளர் சுப்ரமணியன் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பாலாமணி, பொறியாளர் ரத்தினகுமார் உட் பட பலர் உடனிருந்த னர்.
05-Aug-2025