மேலும் செய்திகள்
ரேஷன் கடை பணியாளர்கள் நாளை முதல் ஸ்டிரைக்
15-Oct-2024
கடலுார், : ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கூ கூறியதாவது: பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் சரியான எடையில் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். குறைந்த எடையில் பொருட்கள் கொடுத்துவிட்டு இருப்பு குறைவு என்று, இரு மடங்கு தண்டனை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய அறிவித்திருந்தனர்.இயற்கை பேரிடர் காலத்தால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
15-Oct-2024