உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது கண்டுகொள்ளாத நிர்வாகம்

 அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது கண்டுகொள்ளாத நிர்வாகம்

கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலுார் அரசு மருத்துவமனை கடந்த 1907ம் ஆண்டு துவங்கப்பட்டது. பழமை வாய்ந்த இந்த மருத்துவமனையில், 700க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையின் முதல் தளத்தில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு உள்ளது. நோயாளிகளை அழைத்து செல்ல எக்ஸ்ரே பிரிவு அருகில் லிப்ட் வசதி உள்ளது. இதன் மூலமாக ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு மேல் தளத்தில் இருப்பவர்கள் கீழ் தளத்துக்கு எளிதில் சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக லிப்ட் பழுது ஏற்பட்டு இயங்காமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால், வேறு வழியின்றி அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள சாய்வு தளம் வழியாகவே நோயாளிகளை தரைதளத்தில் இருந்து கிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, நோயாளிகள் மத்தியில் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. எனவே, லிப்ட்டை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ