உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலம் பாலக்கரையில், அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் வழக்கறிஞர் அருண், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் முருகுமணி, மாநில பேரவை துணை செயலாளர் அருள் அழகன், மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் அய்யாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார்.ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து, முனுசாமி, தம்பிதுரை, வேல்முருகன், சின்ன ரகுராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.அப்போது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தி.மு.க., எம்.எல்.ஏ., வீட்டில் சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை