உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்குறள் பற்றாளருக்கு தமிழ்ச்சங்கம் பாராட்டு  

திருக்குறள் பற்றாளருக்கு தமிழ்ச்சங்கம் பாராட்டு  

கடலுார் : கடலுார் பாரதி சாலையில் உள்ள பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஷ்டர் அலி தனது தந்தை ரகீம் நினைவாக கடந்த மே 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை நடத்தினார். இதில் எல்.கே.ஜி.,முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து பரிசு பெற்றனர். ஒரு திருக்குறள் கூறினாலும், ஊக்கப்படுத்தும் விதமாக பரிசளிக்கப்பட்டது. மேலும், 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவருக்கு தங்க காசு பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஷ்டர் அலியின் திருக்குறள் பற்றினை பாராட்டி, ஐந்தாம் உலக தமிழ்ச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் முத்துக்குமரன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. ஐந்தாம் தமிழ்ச்சங்கம் மற்றும் மாநகரின் முக்கிய பிரமுகர்கள் நிஷ்டர் அலிக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் மேலாளர் அன்சாரி மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை