உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லில் புகையான் பூச்சி கட்டுப்படுத்த ஆலோசனை

நெல்லில் புகையான் பூச்சி கட்டுப்படுத்த ஆலோசனை

கடலுார்: நெல்லில் புகையான் பூச்சி நோயை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.நெல்லில் பூச்சிநோய் கட்டுப்படுத்துவது குறித்து குமராட்சி வேளாண் உதவி இயக்குனர் தமிழ்வேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சம்பா சாகுபடி பூக்கும் தருணம் முதல் பால் கட்டும் தருணம் வரையுள்ள நிலையில் பனிப்பொழிவு காரணமாக புகையான் பூச்சி மற்றும் குலைநோய் தாக்குதல் தென்படுகிறது. புகையான் தத்துப்பூச்சி தாக்குதலால் நெற்பயிர் எரிந்து புகைந்துவிட்டதைப்போல் காணப்படும். இதைக்கட்டுப்படுத்த விலக்கி பட்டம் அமைத்து பயிரின் அடிப்பகுதியில் காற்று,சூரியவெளிச்சம் படச்செய்ய வேண்டும். வயலில் தண்ணீரை வடித்துவிட்டு ஏக்கருக்கு லைமெட்ரோசைன் 120 கிராம் அல்லது டிரைபுளுமெசோபைரிம் 10 எஸ்ர்ப் 100மில்லி மருந்தை 200லிட்டர் நீரில் கலந்து பயிரின் அடிப்பகுதியில் படும்படி தெளிக்க வேண்டும்.குலைநோய் காரணமாக பி.பி.டி.,நெல் ரகத்தில் இலையில் நீள்வட்ட புள்ளியுடன், தண்டு, கணு, கதிரின் கழுத்து மற்றும் தானியத்தை தாக்குதலால் நெல் பால் கட்டாமல் பதறாகி இழப்பை ஏற்படுத்துகிறது. இதைக்கட்டுப்படுத்த ஏக்கருக்கு டிரைசைக்லோசோல் 120 கிராம் மற்றும் டெபுகொனோசோல் 250 மில்லி ஆகிய மருந்துகளை 200லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ