உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் சமூக வலைதளங்களில் பரப்ப அறிவுரை

அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் சமூக வலைதளங்களில் பரப்ப அறிவுரை

தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளுங்கட்சியான, தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்க, தமிழக முழுவதும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் அ.தி.மு.க., வும், மாவட்ட வாரியாக புதிய பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணியை முடக்கிவிட்டுள்ளது. கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., விற்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் நுட்ப செயலாளர் கிருபானந்தன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சில வாரங்களாக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தில், தொழில் நுட்ப பொறுப்பாளர் கிருபானந்தன், 9 பேர் கொண்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் சிதம்பரம் தொகுதி முழுவதும் பூத் வாரியாக தனித்தனியாக வாட்ஸ் ஆப் குழு அமைக்க வேண்டும். அக்குழுவில் அப்பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இணைக்க வேண்டும். கடந்த தேர்தலின்போது தி.மு.க., அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை, நிறைவேற்றவில்லை என வாட்ஸ் ஆப் குழுவில் விமர்சிக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், விவசாய கடன் தள்ளூபடி, கல்விக்கடன் தள்ளூபடி உள்ளிட்ட அனைத்து சாதனைகளையும் பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் சமூக வலை தளங்களில் பரப்ப வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியின் சுற்றுப்பயண விபரங்கள், தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் முக்கிய தகவல்கள் இந்த வாட்ஸ் ஆப் மூலம் தெரிந்துக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என அறி வுரை கூறி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி