மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி
14-Sep-2024
விருத்தாசலம்: கம்மாபுரம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாய கண்காட்சி மற்றும் கருத்துக்காட்சி நடந்தது.கம்மாபுரம் வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்துறை சம்பந்தமான கண்காட்சி மற்றும் கருத்துக்காட்சியை, வேளாண் இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் துவக்கி வைத்தார். ஆத்மா குழு தலைவர் ராயர் முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் வெங்கடேசன் வரவேற்றார்.அதில், உயர்தர ரகங்கள், பயிர் சாகுபடி முறைகள், நவீன தொழில்நுட்பங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு, விதை உற்பத்தி உள்ளிட்டவைகள் அடங்கிய படங்கள் விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் விவசாயிகள் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.வேளாண் அலுவலர் சிவகாமசுந்தரி, துணை வேளாண் அலுவலர் பிரான்சிஸ், வட்டார தொழில்நுட்ப அலுவலர் தங்கதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், பஞ்சமூர்த்தி உட்பட உதவி அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
14-Sep-2024