உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நேரடி நெல் விதைப்பில் உருளும் விதைக்கருவி; வேளாண் அதிகாரி தகவல்

நேரடி நெல் விதைப்பில் உருளும் விதைக்கருவி; வேளாண் அதிகாரி தகவல்

கடலுார்; நெல் விதைகளை உருளும் விதைக் கருவி மூலம் சேற்றில் நேரடியாக விதைக்கலாம். குமராட்சி வேளாண் உதவி இயக்குனர் தமிழ்வேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குமராட்சி வட்டாரத்தில் தற்போது விவசாயிகள் பின்பட்ட சம்பா தாளடி சாகுபடிக்காக நிலத்தை உழுது சமப்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நடப்பு பட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பி.பி.டி.5204, டிகேஎம் 13, எடிடீ 54, கோ 52 போன்ற சான்று விதைத்தேர்வு செய்ய வேண்டும். பின், ஏக்கருக்கு 12 கிலோ விதையை விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது விதைநெல்லை 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து பின் 24 மணிநேரம் மூட்டம் கட்டிய விதைகளை உருளும் விதைக் கருவி மூலம் சேற்றில் நேரடியாக விதைக்கும்போது 20 செ.மீ இடைவெளியில் சீராக வரிசையாக விதைக்கப்படுகிறது. இம்முறையில் 65 சதவீத விதைகளை மிச்சப்படுத்தலாம். குறைந்த வேலையாட்கள், இடுபொருட்கள் செலவு குறைவு, 10முதல் 15 நாட்கள் முன்னதாக அறுவடைக்கு தயாராகி அதிக மகசூல் கிடைக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ