உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவியர் பயிற்சி முகாம்

வேளாண் மாணவியர் பயிற்சி முகாம்

புவனகிரி,; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள், கிராமங்களில் தங்கி விவசாயிகளுடன் நேரடி பயிற்சி பெறும் முகாம் புவனகிரி அருகே அம்பலத்தடிகுப்பம் கிராமத்தில் நடந்தது.முன்னாள் ஊராட்சி தலைவர் சுடர்விழி அன்பரசன் துவக்கி வைத்தார். குழு தலைவி ஜஸ்மிதா வரவேற்றார். பேராசிரியர் துரைராஜ், முன்னோடி விவசாயி ராமதாஸ் முன்னிலை வகித்தனர். மாணவிகள் எஸ்.ஜெயஸ்ரீ, சி.ஜெயஸ்ரீ கரிம கழிவு மறு சுழற்சி குறித்தும், மாணவி ஜெயந்தி பாய் நாற்றங்கள், மாணவி ஜனனி மண்சூரியமயமாதல், டி.ஜனனி இயற்கை முறையில் கஞ்சிய நீர் வடிகட்டி அமைப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.குழு துணைத் தலைவி ஜனனி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை