உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி

வேளாண் மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி

புவனகிரி அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவிகள், புவனகிரி அருகே வயலுாரில் தங்கி பயிற்சி பெறும் முகாம் துவங்கியது.'ஜி.9' குழுவின் மாணவ தலைவி சங்கமித்ரா தலைமையில் கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் நேரடி பயிற்சி முகாம், கீரப்பாளையம் வயலுாரில் நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் கனகம்ராசு தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் தங்கமுருகவேல் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் ஜேசு, முகாமை துவக்கி வைத்தார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல விரிவாக்கத்துறை பேராசிரியர் தமிழ்ச்செல்வி, உதவி பேராசிரியர் பாலமுருகன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினர். முகாமில் மாணவியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை