உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவிகள் மஞ்சக்குழியில் பயிற்சி

வேளாண் மாணவிகள் மஞ்சக்குழியில் பயிற்சி

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழியில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு ஜி 3 மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்ட துவக்க விழா நடந்தது.ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தங்கமணி தலைமை தாங்கி, பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். குழு தலைவி நிஷா வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல விரிவாக்கத்துறை பேராசிரியர் தமிழ்ச்செல்வி, உதவி பேராசிரியர் மீனாம்பிகை நோக்க உரையாற்றினர். மாணவிகள், விவசாய நிலங்களுக்கு சென்று, சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்களின் வளர்ச்சி, பயிர்களை தாக்கும் நோய்கள் குறித்து, விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். ஊராட்சி செயலாளர் ஞானசேகரன், வார்டு உறுப்பினர் கமலகண்ணன், மாணவிகள் நிஷாந்தினி, நிகிதா, நேத்ரா, தி.நிஷா, நர்மதா, மு.நர்மதா, நிவேதா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி